என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் மரணம்"
சேரன்மகாதேவியில் உள்ள யூனியன் அலுவலக தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் தொழிலாளி. இவரது மனைவி தேவி (வயது35). இவர் அந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருந்தார். இதில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.1½ லட்சம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் தேவியால் அந்தக் கடனை கட்ட முடியவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்தார்.
இந்த நிலையில் தேவி நேற்று தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ குளித்தார். அலறல் சத்தம் கேட்டு தங்கராஜ் விரைந்து சென்று தீயை அணைத்து காப்பாற்றினார். இதில் அவரது உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது. இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தேவி பரிதாபமாக இறந்தார். தங்கராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
திரிசூலத்தை சேர்ந்தவர் கவுரி (வயது 40). இவர் சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் டோக்கன் வழங்கும் வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை அவர் வழக்கம் போல் வாகன ஒட்டிகளுக்கு டோக்கன் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி சுருண்டு விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் கவுரியை மீட்டு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பரிசோதித்த டாக்டர்கள் கவுரி ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேராவூரணி:
பேராவூரணி அருகே முடச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி(வயது56). இவரது மனைவி நாகம்மாள்(48). இருவரும் நேற்று மாலை விளங்குளம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு இரவு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினர்.
அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது சம்பைப்பட்டினம் என்ற இடத்தில் எதிரே வந்த கார் மோதி 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நாகம்மாள் இறந்தார்.
ராமமூர்த்தி பேராவூரணியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டிவந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜ்மோகன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை:
கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை மாசாணியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (28) தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஸ்ரீதேவி (24). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதம் ஆகிறது.
ஸ்ரீதேவி தனியார் நிறுவனத்தில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை கணவன்-மனைவி இருவரும் தங்கள் நிறுவனத்தில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்கள்.பின்னர் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு வந்தனர். பொருட்கள் வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
தெப்பம்பட்டி பிரிவு முருகன் நகரில் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் ஸ்ரீதேவி சம்பவ இடத்திலே இறந்தார். பிரேம் குமார் காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரன்கோவில்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாண்டியாபுரம், புதூரை சேர்ந்தவர் கனிராஜா (வயது43). இவரது தங்கை பானுமதி (21).
இவருக்கும் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சூரங்குடியை சேர்ந்த முத்துக்குமார் (25) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. முத்துக்குமார் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணத்திற்கு பின் பானுமதியும், முத்துக்குமாரும் 5 நாள் மட்டுமே ஒன்றாக வசித்துள்ளனர்.
அதன்பிறகு முத்துக்குமார் பெங்களூர் சென்று விட்டார். அவ்வப்போது மனைவியை சந்திக்க வருவாராம். இந்த நிலையில் நேற்று முத்துக்குமார் வீட்டில் இருந்து கனிராஜுக்கு போன் வந்தது. போனில் பேசிய முத்துக்குமாரின் உறவினர்கள் உனது தங்கை பானுமதி வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடக்கிறார் என கூறினார்கள்.
இதையடுத்து கனிராஜ் பதறியபடி சூரங்குடி வந்தார். அங்கு சென்றதும் பானுமதி சங்கரன்கோவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்கள். இதையடுத்து அவர் சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தார். அங்கு பானுமதி ஆஸ்பத்திரியில் இறந்த நிலையில் கிடந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கனிராஜ் சங்கரன்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தனது தங்கை சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கனிராஜ் போலீசாரிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பானுமதி சாவுக்கு காரணம் என்ன? அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் நேற்று இரவு 50 வயது மதிக்க தக்க பெண் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென அவர் சுருண்டு விழுந்தார்.இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரெயில்வே போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பார்த்தனர்.
அப்போது அப்பெண் இறந்தது தெரிய வந்தது. அவர் கறுப்பு வெள்ளை மஞ்சள் பூ போட்ட சேலை அணிந்து இருந்தார். அவர் யார் ? எந்த ஊர்? என்பது தெரியவில்லை.இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் அருகே உள்ள ஈங்கூர் ரெயில் நிலையம் அருகே 50 வயது மதிக்க தக்க ஆண் தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.அவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர் யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லம்புதூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 28). இவரும் பொன்மணி என்பவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பொன்மணி சம்பவத்தன்று தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவர் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நத்தம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் பொன்மணியின் தாய் அமராவதி நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருமணமாகி 7 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. ஜீவா மேல் விசாரணை நடத்தி வருகிறார். நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
திருப்போரூர், டிச. 28-
கேளம்பாக்கம் அருகே உள்ள நாவலூரை அடுத்த தாழம்பூர் ஊராட்சியில் 29 மாடிகள் கொண்ட ராணுவ குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
இதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், அவரது மனைவி ஷீலாதேவி (வயது 20) ஆகியோர் அங்கு தங்கி வேலை பார்த்து வந்தனர்.
நேற்று மாலை வழக்கம் போல் இருவரும் வெவ்வேறு தளங்களில் வேலை பார்த்து கொண்டு இருந்தனர். சுமார் 4 மணி அளவில் 19-வது மாடியில் இருந்த ஷீலாதேவி திடீரென கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசா ரணை நடத்தினர்.
19-வது மாடியில் இருந்து ஷீலாதேவி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அவரை தள்ளிவிட்டு கொலை செய்தனரா? என்று பல் வேறு கோணங்களில் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த காவலாளி, பணியில் இருந்த போது மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே சிறைக்காடு பழங்குடியினர் குடியிருப்பில் வசிப்பவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் சித்ரா (வயது19). இவருக்கும் போடி டி.வி.கே.கே.நகரை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது சித்ரா திடீரென இறந்துள்ளார். கார்த்திக் கண் விழித்து பார்த்தபோது மனைவி பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போடி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில் சித்ராவிற்கு மனநோயும், சர்க்கரை நோயும் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் திருமணத்தன்று திடீரென பிரம்மை பிடித்தவர்போல் நடந்துகொண்டு கார்த்திக்கை கடுமையாக தாக்கி உள்ளார். இந்த நோய்க்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சித்ரா எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 2 நாளில் புதுப்பெண் இறந்ததால் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. மேல் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் சத்திரரெட்டியபட்டி மின்வாரிய காலனியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது53), தனியார் நிறுவன காவலாளி.
இவரது மனைவி முத்துலட்சுமி (45). இவருக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த 23-ந்தேதியும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த காளியப்பன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து முத்துலட்சுமியை வெட்டினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
மனைவி ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததை கண்ட காளியப்பன் பயந்து விட்டார். வீட்டை விட்டு வெளியேறிய அவர் விஷம் குடித்து மயங்கினார்.
கணவன்-மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முத்துலட்சுமி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையில் விருதுநகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காளியப்பன் அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். முத்துலட்சுமி இறந்ததை தொடர்ந்து பாண்டியன் நகர் போலீசார் காளியப்பன் மீது கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முள்ளக்காடு:
தூத்துக்குடி மாவட்டத்தில் மர்மக்காய்ச்சல் பரவி வருவதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி சாந்தினி என்ற கர்ப்பிணி மர்ம காய்ச்சல் காரணமாக இறந்தார். பின்னர் கழுகுமலையை சேர்ந்த ஒருவர் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தார்.
இதையடுத்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் அரசு, தனியார் மருத்துவ மனைகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி அத்திமரப்பட்டி 56-வது வார்டுக்கு உட்பட்ட வேதக் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசிகாமணி. விவசாயி. இவரது மனைவி கெப்சிபாய். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் கெப்சி பாய்க்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஏற்கனவே மர்மகாய்ச்சலுக்கு சிலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கெப்சிபாய் என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார். எனவே சுகாதாரத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தீவிர சுகாதார பணிகளை முடுக்கிவிட்டு தீவிர தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #Swineflu #Dengue
சாயல்குடி:
சாயல்குடி அருகே உள்ள பீ.கீரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி லட்சுமி (வயது 57).
இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது சாலையில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது.
அதனை லட்சுமி கவனிக்கவில்லை. இருளில் நடந்து சென்ற அவர் மின் கம்பியை மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கப்பட்ட லட்சுமி, சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார்.
சிக்கல்போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் இறந்த சம்பவம் கீரந்தை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்